ராமநாதபுரம்டிராக்டர் கவிழ்ந்து இறந்த மூன்று பேரின் குடும்பத்தாருக்கு முதல்வர் அறிவித்த அரசின் நிதியுதவியும், அமைச்சர் ராஜ கண்ணப்பன் நிதியுதவியும் வழங்க பட்டது

ராமநாதபுரம்டிராக்டர் கவிழ்ந்து இறந்த மூன்று பேரின் குடும்பத்தாருக்கு முதல்வர் அறிவித்த அரசின் நிதியுதவியும், அமைச்சர் ராஜ கண்ணப்பன் நிதியுதவியும் வழங்க பட்டது
X
15 நாட்களுக்கு ஒரு முறை கூவர்கூட்டம் கிராமத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கூவர் கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் ரேஷன் அரிசி வாங்குவதற்காக டிராக்டரில் பொதிகுளம் கிராமத்திற்கு வந்து ரேஷன் பொருட்கள் வாங்கி திரும்பச் செல்லும்போது டிராக்டர் கவிழ்ந்து பொன்னம்மாள்(60) ராக்கி(65), முனியம்மாள் (65) மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தமிழக முதல்வர் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்க உத்தரவிட்டார் இதனை அடுத்து இன்று இரவு 8 மணியளவில் கூவர் கூட்டம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங்காலோன் மற்றும் வனத்துறை மற்றும் கதர் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் அறிவித்த தலா 3 லட்சம் நிதி உதவியும், அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் சொந்த நிதியில் அவரது குடும்பத்தாருக்கு தலா 25 ஆயிரம் நிதி வழங்கினர். பொதுமக்கள் தஙகள் ஊருக்கு சாலை வசதி பேருந்து வசதி குடி தண்ணீர் வசதி ரேஷன் கடை வசதி கேட்டதற்கு அங்குள்ள பொதுமக்களிடம் அந்த கிராமத்திற்கு விரைவில் ரேஷன் கடையும், குடிநீர், சாலை வசதி, மற்றும் பேருந்து வசதியும் செய்து தருவோம் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் 15 நாட்களுக்கு ஒரு முறை இங்கு வந்து ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இறந்தவரின் இரண்டு குழந்தைகள் படிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது, அரசு சார்பில் மூன்று லட்சம் பணமும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் பணம் கொடுத்துள்ளோம், காயப்பட்டவர்களுக்கு ஐம்பதாயிரம் நிதி உதவியும் வழங்கப்பட உள்ளது எனக் கூறியுள்ளார்
Next Story