செய்யூர் அருகே கல்குவாரி லாரி இருசக்கர வாகனத்தில் மீது மோதி விபத்து

செய்யூர் அருகே கல்குவாரி லாரி இருசக்கர வாகனத்தில் மீது மோதி விபத்து
X
செய்யூர் அருகே கல்குவாரி லாரி இருசக்கர வாகனத்தில் மீது மோதி விபத்து
செய்யூர் அருகே கல்குவாரி லாரி இருசக்கர வாகனத்தில் மீது மோதி விபத்து விபத்தில் மின்வாரிய ஊழியருக்கு கால் முறிவு பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியால் பரபரப்பு செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் அடுத்த விளங்கனூரை சேர்ந்த செல்லமுத்து இவர் இருங்காட்டுக்கோட்டையில் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். செல்லமுத்து என்பவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் விவசாய நிலத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் பொழுது சித்தாமூரிலிருந்து செய்யூர் நோக்கி கல்குவாரி லாரி இருசக்கர வாகனத்தில் சென்ற செல்லமுத்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் செல்லமுத்துவிற்கு இரண்டு கால்கள் முடிவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை அடுத்து சித்தாமூர் - செய்யூர் மாநில நெடுஞ்சாலையில் சென்ற கல்குவாரி லாரிகளை பொதுமக்கள் சிறை பிடிக்க முயன்றனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் போலீசார் கல்குவாரி லாரிகளை சிறை பிடிக்க முயன்ற பொது மக்களிடம் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு அளிக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story