சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி

சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம்  விவசாயிகள் மகிழ்ச்சி
X
சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இதனால் சங்கரன்கோவில், களப்பகுளம், அழகாபுரி, கரிசல்குளம் உள்ளிட்டபகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடையை தீவிரமாக செய்துவருகின்றனர் விவசாயிகள். இந்த நிலையில் சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story