பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அப்துல்கலாம் நினைவுநாள் புகழ்வணக்கம்
அம்மாப்பாளையத்தில் பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அப்துல்கலாம் நினைவுநாள் புகழ்வணக்கம்: தமிழ்ப்பேரினத்தின் அறிவியல் அடையாளம் டாக்டர். அப்துல்கலாம் ஐயாவின் 10-ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று(27.07.2025) பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அம்மாபாளையம் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன, பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களாக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார், மேற்கு மாவட்டத்தலைவர் கிருஷ்ணபிரசாந்த் ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்வில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜான்சிராணி,மாநில தகவல்தொழில்நுட்பப் பாசறை துணைச்செயலாளர் சத்தியசீலன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், மாநிலக்குருதிக்கொடைப்பாசறை ஒருங்கிணைப்பாளர் விஜய், மாநில சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் சரத்குமார் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களான சிவநேசன், அஜித்குமார், உள்ளிட்டப் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






