கிருஷ்ணகிரி எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் நடத்தப்படும் எரிவாயு நுகர்வோர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 28.07.2025 திங்கள் கிழமை அன்று மாலை 04.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, மேற்படி எரிவாயு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்துக் கொள்ள உள்ளதால், நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்
Next Story

