பொருள்வைத்தச்சேரி ஶ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா
நாகை மாவட்டம் சிக்கல் அடுத்த பொருள்வைத்தச்சேரியில், பழமை வாய்ந்த ஶ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.இக்கோவிலில், ஆடி பெருந் திருவிழா கடந்த ஜூலை18 -ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, பால்குட ஊர்வலம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ தண்டபாணி முருகன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலமானது சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. ரத காவடி நடனத்துடன் நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் மஞ்சளாடை உடுத்திய 108 பக்தர்கள் பால் குடங்களை சுமந்து வந்து அம்மனுக்கு நேரத்திக்கடன் நிறைவேற்றினர். பக்தர்கள் கொண்டு வந்த பால் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மனை மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story




