ஆவணம் இல்லாவிட்டால் அபராதம் சொல்லாமல் விதிப்பதா ? திரைப்பட இயக்குனர் அதிருப்தி

ஆவணம் இல்லாவிட்டால் அபராதம் சொல்லாமல்  விதிப்பதா ? திரைப்பட இயக்குனர்   அதிருப்தி
X
குமாரபாளையத்தில் ஆவணம் இல்லாவிட்டால் அபராதம் சொல்லாமல் விதிப்பதா ? என திரைப்பட இயக்குனர் அதிருப்தி
குமாரபாளையத்தில் ஆவணம் இல்லாவிட்டால் அபராதம் சொல்லாமல் விதிப்பதா ? என திரைப்பட இயக்குனர் அதிருப்தியுடன் கூறினார். இது குறித்து ராட்ட எனும் திரைப்படத்தின் இயக்குனர் சக்திவேல் நாகப்பன் கூறியதாவது: நான் பல படங்களில் நடித்தும், இயக்கியும் உள்ளேன். எனது மேலாளர் கார்த்திகேயன் டூ வீலர் ஓட்ட, நான் பின்னால் உட்கார்ந்து சென்றேன். கவுரி தியேட்டர் அருகே, போக்குவரத்து ஆய்வாளர் கோபிநாத் பிடித்து ஆவணங்கள் கேட்டார். இன்சூரன்ஸ் புதுப்பிக்கப் படாமல் இருந்தது. மேலாளர் வசம் போன் நம்பர் வாங்கி கொண்டு போக சொன்னார். லட்சுமி நகர் போன பின், அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் 700 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. ஒருவரிடம் ஆவணம் சரி பார்த்து, அபராதம் விதிப்பது என்றால், சம்பந்தப்பட்டவரிடம் சொல்லாமல் அபராதம் விதிப்பது சரியா? நான் நேரில் சந்தித்து வந்த போதே, என்னிடம் சொல்லி இருக்கலாம். அதை விட்டுவிட்டு, போக சொல்லி விட்டு அபராதம் விதித்தார் ஆய்வாளர் கோபிநாத். அவரை நேரில் சென்று கேட்ட போது, அப்படி சொல்லிவிட்டு அபராதம் விதிக்க வேண்டியது இல்லை, என்றார். சமூகத்தில் செல் போன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன், சினிமா தொழில் செய்து வருகிறேன், சமூக சேவை எனும் விதத்தில் , கல்வி உதவி, ரத்த தானம், உணவு வழங்கல் உள்ளிட்ட சேவைகள் செய்து வருகிறேன். இப்படிப்பட்ட என்னிடம் சொல்லாமல்தான் அபராதம் விதிப்பேன் என்பது, எந்த விதத்தில் நியாயம்? என்னிடம் நேரில் சொன்னால் அதை செலுத்த தான் போகிறேன். நேரில் வந்த என்னிடம் சொல்லாமல், அங்கிருந்து போகச் சொல்லிவிட்டு அதன் பின் அபராதம் விதிப்பது எந்த விதத்தில் சரி? எங்களிடம் செல் போன் இருந்தது. ஆன் லைனில் அபராதம் விதித்து விட்டார். எத்தைனையோ ஏழை மக்களிடம் செல் போன் இல்லாமல் உள்ளது. அவர்களின் நிலை என்ன? இவ்வாறு அவர் கூறினார்.
Next Story