காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் : மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை

X
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தஞ்சாவூர் வட்டக்கிளை 21 ஆவது திட்ட மாநாடு சனிக்கிழமையன்று, தஞ்சாவூரில் வட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. வட்டச் செயலாளர் எம்.சந்தானமுத்து வரவேற்றார். ஒரத்தநாடு கோட்டச் செயலாளர் எஸ்.ரவி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மண்டலச் செயலாளர் எஸ்.இராஜாராமன் துவக்க உரையாற்றினார். வட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ் வேலை அறிக்கையும், வட்டப் பொருளாளர் எஸ்.சங்கர் வரவு செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து விவாதம், தீர்மானங்கள், தொகுப்புரை, புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. சி.முருகேசன், ஆர்.வளவராசு, ஆர்.ரவி, பி.தேவேந்திரன், ஆர்.ஹரிகேசன், டி.ஆறுமுகம் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். நிர்வாகிகள் தேர்வு தஞ்சை வட்ட கவுரவத்தலைவராக டி.கோவிந்தராஜ், தலைவராக ஏ.அதிதூத மைக்கேல்ராஜ், செயலாளராக பி.காணிக்கை ராஜ், பொருளாளராக பி.மணிவண்ணன் மற்றும் 12 பேர் துணைத் தலைவர்களாகவும், 10 பேர் துணைச் செயலாளர்களாகவும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். ஓய்வுபெற்ற மின் ஊழியர் அமைப்பின் மாநிலச் செயலாளர் டி.கோவிந்தராஜ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத்தலைவர் எஸ்.ஜோதி நிறைவுறையாற்றினார். கும்பகோணம் கோட்டச் செயலாளர் கே.மணிவண்ணன் நன்றி கூறினார். தீர்மானங்கள் "மின்துறையை தனியார் மயமாக்க கூடாது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கேங்மேன் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, ஊர் மாற்றம் வழங்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மொபைல், ஆப் மூலம் ரீடிங் எடுக்கும் முறையை கைவிட வேண்டும்" என்பன உளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story

