போலி லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது

X
Komarapalayam King 24x7 |27 July 2025 7:44 PM ISTகுமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கோட்டைமேடு, ஆலங்காட்டுவலசு பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்று இரவு 07:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், போலி லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சஞ்சய், 32, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, போலி லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
