டூவீலர்கள் மோதிய விபத்தில் தம்பதியர் படுகாயம், ஒருவர் கைது

டூவீலர்கள் மோதிய விபத்தில் தம்பதியர் படுகாயம், ஒருவர் கைது
X
குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் தம்பதியர் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம் கிழக்கு காலனி பகுதியில் வசிப்பவர்கள் மோகன்ராஜ், 48. கூலி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 43. ஜூலை 20, இரவு 08:45 மணியளவில் அக்செஸ் எனும் டூவீலரில், மோகன்ராஜ் ஓட்ட, தமிழ்ச்செல்வி பின்னால் உட்கார்ந்தவாறு, கவுரி தியேட்டர் பின்புறம் சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு எதிர் திசையில் வேகமாக வந்த ஹோண்டா ஆக்டிவா வாகன ஓட்டுனர், இவர்கள் வாகனத்தின் மீது மோத, கீழே விழுந்த தம்பதியர் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் கருங்கல்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான ஹோண்டா ஆக்டிவா ஓட்டுனர், சங்ககிரி அருகே காவேரிப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த முத்துராஜ், 43, என்பவரை கைது செய்தனர்.
Next Story