டூவீலர் மோதியதில் நடந்து சென்றவர் பலி

X
Komarapalayam King 24x7 |27 July 2025 7:52 PM ISTகுமாரபாளையம் டூவீலர் மோதியதில் நடந்து சென்றவர் பலியானார்.
குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்தவர் முருகன், 47. ஜவுளி தொழில். இவர் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில், பள்ளிபாளையம் சாலை, ராகவேந்திரா கல்லூரி எதிரில், நடந்து சாலையை கடக்கும் போது, அவ்வழியே வந்த பஜாஜ் பல்சர் வாகன ஓட்டுனர் இவர் மீது மோத, பலத்த காயமடைந்தார். இவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் வழியில் இறந்து விட்டதாக கூறினார். விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர் ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையத்தை சேர்ந்த கம்பி கட்டும் கூலித் தொழிலாளி ஆண்டிமுத்து, 45, இவருக்கு பின்னால் அமர்ந்து வந்த இவரது நண்பர் கூலித் தொழிலாளி சுப்பிரமணி, 72, இருவரும் காயமடைந்தனர். இவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
