ஆடி மாதம் துவங்கியதை தொடர்ந்து காரியாபட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழையின் எதிர்பார்த்து விவசாயிகள் விளைநிலங்களை உழவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்

ஆடி மாதம் துவங்கியதை தொடர்ந்து காரியாபட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழையின் எதிர்பார்த்து விவசாயிகள் விளைநிலங்களை உழவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்
X
ஆடி மாதம் துவங்கியதை தொடர்ந்து காரியாபட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழையின் எதிர்பார்த்து விவசாயிகள் விளைநிலங்களை உழவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்
ஆடி மாதம் துவங்கியதை தொடர்ந்து காரியாபட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழையின் எதிர்பார்த்து விவசாயிகள் விளைநிலங்களை உழவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான மேலத்துலுக்கன்குளம், கீழத்துலுக்கன்குளம், நந்திக்குண்டு, மாந்தோப்பு, அச்சங்குளம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டு தோறும் அதிகளவில் பருந்தி, உளுந்து, பாசிபயிறு, துவரை, மக்காச்சோளம் விவசாயம் செய்கின்றனர். கடந்த ஆண்டு அறுவடைக்கு பின் விளை நிலங்களில் நிலவிய ஈரப்பதத்தை பயன்படுத்தி அவ்வப்போது விவசாயிகள் கோடை உழவு செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது ஆடி மாதம் பிறந்ததை தொடர்ந்து தென்மேற்கு பருவமழையில் கிடைக்கும் மழை நீர் மண்ணில் நல்ல ஆழமாக செல்லும், வரும் ஆடிப்பட்டத்தின் போது மானாவாரி சாகுபடிக்கு தற்போதைய உழவு கை கொடுக்கும் என்பதால் விளை நிலங்களை பருத்தி, துவரை விதைப்புக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தும் விதமாக விவசாய நிலங்களை டிராக்டர் மூலம் உழுது மண்ணை பொலிவு படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story