காவிரி பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்.

X
Komarapalayam King 24x7 |27 July 2025 8:35 PM ISTகாவிரியில் உபரி நீர் திறக்கப்படுவதால் குமாரபாளையம் பவானி இணைக்கும் பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், கர்நாடகாவில் இருந்து வரும் உபரி நீர் அதிகரித்த வண்ணம் இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன் காவிரி ஆற்றில் குளிக்கவும் துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஈரோடு மாவட்டம் பவானியில் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பலகைவாய்ந்த பாலக்கரை பகுதி பாலத்தில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக பொதுமக்கள் ஈரோடு மாவட்டம் பவானி பகுதி செல்ல சுமார் 3 கிலோமீட்டர் மாற்று பாதையில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது தொடர்ந்து காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
