*விருதுநகரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ....

X
விருதுநகரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் .... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் தமிழக அரசு கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின் ஆசிரியர் பணியில் அமர்த்திட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முரண்பாடான ஊதியத்தை கலைந்து திராவிட முன்னேற்றக் கழக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311 ல் கூறியதை போல் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மேலும் களைந்திடுக, களைந்திடுக ஊதிய முரண்பாட்டை களைந்திடுக, ஊதிய உயர்வு கேட்கவில்லை, உரிய ஊதியம் கேட்கிறோம், ஒன்றா ஒன்றா கர்பிப்பவரும், கடை நிலை ஊழியரும் ஒன்றா என்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லையெனில் வருகின்ற செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் சென்னையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஒன்று கூடி தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர்
Next Story

