விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மண்டல அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

X
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மண்டல அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாணவர் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் சின்னதம்பி உள்ளிட்ட ஏராளமான மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர் காங்கிரஸ் நெல்லை மண்டல அளவிலான செயல் வீரர்கள் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு மாணவர்கள் மேம்பாடு பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தனர். மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் வந்துள்ள பாரதப் பிரதமர் மோடிக்கு எதிராக கோ-பேக் மோடி என கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ் குமார் பொதுவாக தேர்தல் நேரங்களில் மாணவர்களின் பங்கு அதிகமாக தான் உள்ளது என்றார். மேலும் மாணவர் காங்கிரஸை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என்றார். மேலும் அடுத்த தலைமுறைக்கு கட்சியை கொண்டு செல்லும் மாணவர்களுக்கு முக்கிய பங்கு வழங்கப்படும் என்றார். மேலும் பேசி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தமிழகத்தில் உள்ள இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கும் வகிக்கிறது எனவும் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலத்திற்கு ஏற்ப தொகுதி கள் கூடுதலாக கேட்போம் என்றார். மேலும் பேசிய ராஜேஷ் குமார் மதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனையால் வரும் தேர்தலில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றார். மேலும் பேசிய ராஜேஷ் குமார் பாமக தலைவர் அன்புமணியின் நடை பயணத்தால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த விதமான பிரதிபலிப்போ பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் இல்லை என்றார். மேலும் வரும் தேர்தலில் பாஜகவை ஒட்டியுள்ள அணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றார்.
Next Story

