ஸ்ரீவில்லிபுத்தூர் திருவடிப்பூர விழாவிற்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்து சேர்ந்த சீர்வரிசை பொருட்கள்.....*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவடிப்பூர விழாவிற்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்து சேர்ந்த சீர்வரிசை பொருட்கள்..... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப்பூர திருவிழாவிற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் திருஆடிப்பூர திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஐந்து கருட சேவை, சயன சேவை நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான திருவாடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு தமிழ் மாதமும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம் அதன் அடிப்படையில் ஆடி மாதம் நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு ஸ்ரீ ரங்க மன்னார் வழங்கக்கூடிய எதிர் சீராக ஒவ்வொரு ஆண்டும் பட்டு வஸ்திரங்கள், பழங்கள், மங்களப் பொருட்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னாருக்கு சமர்ப்பிக்கப்படும் அதன் அடிப்படையில் இன்று ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசை பொருட்களை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று அதனை ஏற்றுக்கொண்டு ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருக்கு அணிவித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாலை தரிசனம் செய்தனர்.
Next Story

