ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
X
காங்கேயம் அருகே ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்து வழக்கு பதிவு
காங்கேயம் பகுதியில் சட்ட விரோதமாக கற்கள், மண், மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து திருப்பூர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.காங்கேயம் போலீஸ் நிலையம் ரவுண்டானா வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 40 மெட்ரிக் டன் அளவு ஜல்லி கற்கள் இருந்தது. உரிய எடை சீட்டு மற்றும் அனுமதி சீட்டு இல்லாமல் ஏற்றி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியில் ஜல்லிக்கற்கள் கடத்தி வந்ததாக லாரி பறி முதல் செய்யப்பட்டது. காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story