நீரோடையில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து சிறுமி பலி

X
திண்டுக்கல், தாடிக்கொம்பு, அகரம் முத்தாலம்மன் கோவில் அருகே உள்ள நீரோடையில் குளிக்க சென்ற செல்வராஜ் மகள் தாரணி(11) நீரோடையில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலி, தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கிய சிறுமி தாரணியின் உடலை மீட்டனர். தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சிறுமி தாரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

