பூம்புகார் கப்பல் போக்குவரத்து ஊழியர் சங்க மாநாடு

பூம்புகார் கப்பல் போக்குவரத்து ஊழியர் சங்க மாநாடு
X
கன்னியாகுமரி
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாநாடு நேற்று கன்னியாகுமரி ஒய்எம்சிஏ அரங்கில் சங்க தலைவரும் சிஐடியு மாநிலச் செயலாளருமான ரசல் தலைமையில் நடைபெற்றது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தூத்துக்குடி படகுத்துறை மற்றும் சென்னை தலைமை அலுவலகத்தில் பணிசெய்யும் தொழிலாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டை சிஐடியு கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தங்கமோகனன் துவக்கி வைத்து பேசினார். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை, தொழிலாளர் அலுவலர் உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் அடிப்படையிலும் அவர்களுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக ஒப்பந்த தொழிலாளிகளாக பணிபுரியும் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதா மாதம் 7-ம் தேதியன்று சம்பளம் பட்டுவாடா, சென்னையில் உள்ளது போல் வாரம் ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 26-ம்தேதி கன்னியாகுமரி படகுத்துறை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
Next Story