மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி

X
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு புவிசார் குறியீடு பெற்ற தோவாளை மாணிக்கமாலை தொடுத்தல் சிறப்பு பயிற்சியினை மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: "கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயார் செய்யப்படும் மாணிக்கமாலையானது புவிசார் குறியீடு (Geographical Index) பெற்றுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில், சுசிந்தரம் தாணுமாலையான் கோவில் மற்றும் பல சிறப்பு மிக்க கோவில்களிலும், திருமணம், வரவேற்பு போன்றவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தோவாளையில் பெரிய அளவில் நடைபெற்று வரும் மலர் சந்தைக்கு வரும் பூக்களால், பூ கட்டுதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது மாவட்ட திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் மாணிக்கமாலை தொடுத்தல் பயிற்சியானது மாற்றுத்திறனாளிகள்/ மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை பெண்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் ஆகிய 30 நபர்கள் அடங்கிய குழுவிற்கு மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மதுநசீர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

