பழங்குடியின மக்களை ஆட்சியர் நேரில் சந்தித்தார்

பழங்குடியின மக்களை                                           ஆட்சியர்  நேரில் சந்தித்தார்
X
திருவட்டார்
குமரி மாவட்டம் திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட கொடுதுறை, மணலிக்காடு மலைபகுதியில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் சந்தித்து, கலந்துரையாடி தெரிவிக்கையில்- பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட கொடுதுறை, மணலிக்காடு பகுதிகளில் வாழும் பழங்குடியினர்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவது தொடர்பாக அந்தப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து, அதற்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடப்பட்டது. வன உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தனி மனித உரிமை பட்டா நிலங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டங்களின் கீழ் வீடு கட்டுவதற்கான அஸ்திவார பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வீடு கட்டும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள பயனாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பயனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தி கொடுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. என கூறினார். நடைபெற்ற ஆய்வில் பத்மனாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார் மீனா, திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர், தனி வட்டாட்சியர், வனத்துறை அலுவலர்கள், வன உரிமைச் சட்ட கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story