வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை

வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை
X
மதுரை பெருங்குடி அருகே நேற்று மாலை வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை அருகே பெருங்குடியில் அம்பேத்கர் நகரில் ஆறு பேர் கொண்ட கும்பல் நேற்று (27/07/2025) மாலை கடந்த மார்ச் மாதம் சமத்துவபுரத்தில் நிகழ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான முனீஸ்வரன் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கருமலை மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் மர்ம கும்பல் ஒன்று வெட்டியது இதில் கருமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமுருகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கருமலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கருமலை மற்றும் பாலமுருகனை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story