ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

இண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், இண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நோயாளிகள் பதிவு விவரம், மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.மேலும், பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, மகப்பேறு நல சேவைகள் பிரிவு, பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள் பிரிவு, விஷ முறிவு சிகிச்சைகள் பிரிவுளில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்தார்.இந்நிகழ்வுகளின்போது, பென்னாகரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story