காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனங்கள் திருட்டு
காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் இவர் தனது இருசக்கர வாகனத்தை நேற்று பெரியாம்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள காம்ப்ளக்ஸ் முன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது,வாகனம் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். இதேபோல், பாலக்கோடு ஆத்துக்காரர் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரின் இரு சக்கர வாகனத்தை பொன்னேரியில் உள்ள கடை முன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வண்டி காணாமல் திடுக்கிட்டார். இதுகுறித்து இன்று காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காரிமங்கலம் உதவி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
Next Story



