கோவை: மெஹந்தி மூலம் உலக சாதனை !

இந்திய ராணுவ வீராங்கனைகள் சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகியோரின் உருவங்களை மெஹந்தி மூலம் வரைந்து உலக சாதனை.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஜன்சன்ஸ் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற வேர்ல்ட் வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகள் இணைந்து, இந்திய ராணுவ வீராங்கனைகள் சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகியோரின் உருவங்களை நேற்று மெஹந்தி மூலம் வெறும் 15 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்வில் நடுவர்களாக ரங்கநாயகி ராமச்சந்திரன், மகேஸ்வரி, சுரேஷ், அர்ச்சனா, அற்புதராஜ் ஆகியோர் பங்கேற்று சாதனையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர். பெண்கள் பேசுகையில், இந்த முயற்சி ராணுவ வீராங்கனைகளுக்கு மரியாதை செலுத்துவதோடு, பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், தொழில் தொடங்கும் ஊக்கத்தையும் வழங்குவதாக தெரிவித்தனர்.
Next Story