கோவை: இ.பி.எஸ். டிராபி கிரிக்கெட் போட்டி – எஸ்.பி. வேலுமணி உரை
கோவை மாவட்டம் சூலூர் அருகே கருகம்பாளையத்தில், 13வது வார்டு செயலாளர் சாய் மெடிக்கல்ஸ் கார்த்தி ஏற்பாட்டில் இ.பி.எஸ். டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதி விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு நேற்று பரிசுகள் வழங்கினார். நிகழ்வில் பேசிய அவர், இளமைக்காலத்தில் கிரிக்கெட் விளையாடி, பின்னர் கட்சியில் இணைந்து அமைச்சர் நிலைக்கே வந்தேன். அ.தி.மு.க.வில் அடிமட்டத் தொண்டர்களுக்கும் உயர்வு கிடைக்கிறது. அம்மா ஜெயலலிதா காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு கோவைக்கு எந்தவிதமான திட்டமும் வழங்கவில்லை, எனக் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடியுடன் பேசி கோவைக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்ததாகவும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்றும் உறுதி அளித்தார். நிகழ்வில், பிற கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
Next Story





