மேலூர் அருகே மீன்பிடித் திருவிழா
மதுரை மேலூர் அருகே மாங்குளபட்டியில் உள்ள பெரய கண்மாயில் மீன்பிடி திருவிழா பாரம்பரிய முறைப்படி இன்று (ஜூலை .28) காலை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களான சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் இருசக்கர வாகனத்தில் வந்து நேற்றிரவு முதலே கண்மாய்கரையில் குவிய ஆரம்பித்தனர். கிராம பெரியவர்கள் வெள்ளை வீசி மீன்களை பிடிக்க அனுமதி அளித்தவுடன் ஒரு சேர கண்மாய்குள் இறங்கிய பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான கச்சா, ஊத்தா, மற்றும் கூடை மீன்பிடி உபகரணங்களை வைத்து மீன்களை பிடித்தனர். இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, கெளுத்தி, ரோகு, ஜிலேபி, அயிரை உள்ளிட்டவற்றை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 1 கிலோ முதல் 3 கிலோ வரை மீன்களை பிடித்தனர். இங்கு பிடித்த மீன்களை யாருக்கும் விற்காமல் வீட்டில் சமைத்து சாப்பிடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story



