பொள்ளாச்சியில் அரசு பஸ்சின் கதவு பறந்ததால் பரபரப்பு!

X
பொள்ளாச்சி அருகே கொங்கலப்பம்பாளையம் பகுதியில் நேற்று அரசு பஸ்சின் பின்புற தானியங்கி கதவு திடீரென கழன்று காற்றில் பறந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பெண்கள் அதிர்ச்சியில் அலறினர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே பஸ் டிரைவர் வாகனத்தை நிறுத்தி, கண்டக்டருடன் சேர்ந்து கதவை எடுத்து வைத்துவிட்டு பஸ்ஸை தொடர்ந்தார். இந்த சம்பவம் பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

