உத்திரமேரூரில் ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற பல்லவர் காலத்தை சேர்ந்த அருள்மிகு ஶ்ரீ துர்கை அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 35ம் ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்த பெண்கள் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்து பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நாதஸ்வர இசை மேளதாள வாத்தியங்களுடன் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நிற புடவை அணிந்து தலையில் பால்குடம் சுமந்தபடி புறப்பட்டு, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்திற்கு வந்து அம்மனுக்கு அவர்கள் கைகளாலேயே பால் அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். பால்குடம் ஊர்வலத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைப்பெற்றது. பால்குடம் ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அருஞ்சுவை சைவ உணவு பரிமாறப்பட்டது.
Next Story




