உத்திரமேரூர் அருகே ஶ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் அமராவதிபட்டிணம் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு கூழ் வார்த்தல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஊர் தெருமுனையில் இருந்து பம்பை உடுக்கை இசை வாத்தியங்களுடன் திரளான பெண்கள் தலையில் பால்குடம் சுமந்தபடி புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்ததை அடுத்து அம்மன் விஷேச பூ கிரகம் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். அப்போது, பக்தர்கள் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். பின்னர், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பாத்திரத்தில் கூழ் எடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் முன் அம்மனுக்கு கூழ் படையல் இட்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
Next Story





