காவல்துறை சார்பில் வாழப்பாடியில் கபடி, கைப்பந்து போட்டிகள்

X
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திருமனூர் பகுதியில் காவல்துறை சார்பில் கபடி, கைப்பந்து போட்டிகள் நடந்தது. இதில் வாழப்பாடி வட்டாரத்தில் உள்ள 25 அணிகள் கைப்பந்து போட்டியிலும், 18 அணிகள் கபடி போட்டியிலும் கலந்து கொண்டனர். வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் போட்டியை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் செல்போன், போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து வெளியேறி விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார். தொடர்ந்து போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுத்தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டது.
Next Story

