வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் .

X
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அப்படி ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள், சேர்வராயன் கோவில், பகோடா பாயிண்ட், லேடி சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், அண்ணா பூங்கா, படகு இல்லம் போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். மேலும் அங்கிருந்த விளையாட்டு உபகரணங்களில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர். வார விடுமுறையையொட்டி நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் தனியார் தங்கும் விடுதிகள் நிரம்பி காணப்பட்டன. ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை பனிமூட்டத்துடன், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் உள்ள ஏரியில் மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
Next Story

