சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில்

X
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பேராசிரியர் தனபாலன் மாநில அளவிலான மூன்றாவது தமிழ் வழக்கு வாதப்போட்டி 3 நாட்கள் நடந்தது. இந்த போட்டிகளின் நிறைவு விழா கல்லூரி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் கீதா வரவேற்றார். விழாவில், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான தாரணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினர்கள் முகமது ஜியாவுதீன், கோபி ரவிக்குமார், சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் வில்ஸ்டோ டாஸ்பின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 3 நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கு வாதப்போட்டிகளில் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி அணியை சேர்ந்த கவியரசன், ஹம்மத் நிஸ் ரீன் மற்றும் யோகலட்சுமி ஆகியோர் முதல் பரிசும், புதுக்கோட்டை மதர் தெரசா சட்டக்கல்லூரி அணியை சேர்ந்த லீனா ஸ்ரீ, காந்தி விஜயசேகர், பாண்டி மாதேவி ஆகியோர் 2-ம் பரிசையும் பெற்றனர். சிறந்த ஆண் வக்கீல் மாணவருக்கான விருதை புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி அணி மாணவர் கவியரசன் பெற்றார். சிறந்த பெண் வக்கீல் மாணவிக்கான விருதை ஹம்மத் நிஸ் ரீன், லீனா ஸ்ரீ ஆகியோர் பெற்றனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில், உதவி பேராசிரியர் சத்தியப்பிரியா நன்றி கூறினார்.
Next Story

