சேலம் தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில்

சேலம் தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில்
X
ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்
ஆடிப்பூரத்தையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் வளைகாப்பு அலங்காரம் விமர்சையாக செய்யப்பட்டிருந்தது. ஆடிப்பூர தினத்தன்று அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் வளையல் காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் அளித்த வளையல்களை கொண்டு அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நெத்திமேட்டில் உள்ள தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் ஒரு லட்சம் வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் விமர்சையாக செய்யப்பட்டிருந்தது. காலை முதல் கொண்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
Next Story