கரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
கரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். நீதி மன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சங்க செயலாளர் நகுல்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பணியாற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக அடிப்படையற்ற இயற்கை நீதிக்கு எதிரான வகையில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story





