ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீகுளிக்க முயற்ச்சி

X
திருப்பத்தூர் மாவட்டம் தனது 16 செண்ட் நிலத்தை மீட்டு தர பலமுறை மனு கொடுத்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தர்ணாவில் ஈடுபட முயன்ற முதியவர். கருணையோடு முதியவரின் நிலை கருதி குடிக்க தண்ணீர் கொடுத்து இரண்டு வாரத்தில் தீர்வு கொடுப்பதாக ஆறுதல் கூறி அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்* திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி தனம்மாள் மகன் வில்லியம் (75) இவருக்கு பல வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 3 ஏக்கர் 86 செண்ட் அளவிலான நிலம் அரசு சார்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 1985ஆம் ஆண்டு யூடியாரில் 16 சென்ட் நிலத்தை அதிகாரிகள் வில்லியமின் தாயாரான தனம்மாள் பெயரில் மாற்றியுள்ளனர். மேலும் வில்லியமின் அண்ணன் மகனான சுதாகர் என்பவர் பலமுறை இந்த சொத்து விவகாரம் குறித்து தன்னை தாக்கியதாகவும் மேலும் தனக்கு கொலை மிரட்டலும் கொடுத்து வருவதாகவும் மேலும் 16 சென்ட் அளவிலான நிலத்தை தனது பெயரில் மாற்றித் தர வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதுவரை மனு அளித்து வந்துள்ளார். ஆனால் இதுவரை அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த வில்லியம்ஸ் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு மனு அளிக்க வந்திருந்தபோது மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பொழுது அவரை இடை மறித்து சோதனையிட்ட காவலர்கள் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தவுடன் திடீரென தர்ணாவிலும் ஈடுபட முயற்சி செய்தார் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வில்லியம்ஸ் தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத ஆத்திரத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கு முழுவதும் அரசு அதிகாரிகள் செய்த தவறுக்காக இதுவரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வந்து மனு அளித்து வருகிறேன். என கத்திக் கொண்டே நுழைந்தார் இதன் காரணமாக பரபரப்பு காணப்பட்டது. பின்பு முதியவரின் நிலை அறிந்த மாவட்ட ஆட்சியர் முதலில் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி கருணை உள்ளத்துடன் இரண்டு வாரத்திற்குள் உங்களுடைய நிலத்தை அளக்க சொல்கிறேன் உண்மையாகவே உங்களுக்கு சேர வேண்டிய இடம் என்றால் பெயர் மாற்றித் தர ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்த பிறகு முதியவர் நிதானமுடன் வெளியேறி சென்றார்.
Next Story

