சலங்கை ஒலி நாட்டுப்புற கலை சங்கத்தின் சார்பில் மனு

சலங்கை ஒலி நாட்டுப்புற கலை சங்கத்தின் சார்பில் மனு
X
பாரம்பரிய கரகாட்ட கலையை தவறாக சித்தரித்து ஆபாச நடனமாடும் நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட ஆபாச நடனங்களை தடை செய்ய வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு புகார் வழங்குவதற்காக திண்டுக்கல் மாவட்ட சலங்கை ஒலி நாட்டுப்புற கலை சங்கத்தின் சார்பாக சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட சங்கத்தின் பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்க வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாவட்ட தலைவர் மல்டி பிரபு பாரம்பரியமாக தமிழக முழுவதும் அனைத்து திருவிழாக்களிலும் கரகாட்டம் நடைபெறுவது வழக்கம் கரகாட்டம் ஆபாசமாகவும் அனைவரையும் முகம் சுளிக்க வைக்க வகையிலும் இருந்தது கிடையாது. தற்போது ஒரு சிலர் கரகாட்டம் என்ற பெயரில் ஆபாசமாக உடைய அணிந்து ஆபாச உடல் அசைவுகளுடன் ஆடுவதும் அதேபோல் அதை youtube .whatsapp. facebook.இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும் இதன் காரணமாக தற்போது மாணவர்கள் இளைஞர்கள் அனைவரும் பாதிப்படைவதாகவும் மேலும் பாரம்பரிய கரகாட்ட கலையும் அழிந்து வருவதாகவும் மேலும் கரகாட்டத்தை குடும்பத்துடன் யாரும் பார்க்க முடியாத அளவிற்கு இருப்பதால் முகம் சுழித்து செல்வதால் கரகாட்டக்கலை அழியும் சூழ்நிலையில் உள்ளதால் ஆபாசமாக ஆடும் நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து பதிவு செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளவர்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story