சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய எம்.எல்.ஏ

சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய எம்.எல்.ஏ
X
திண்டுக்கல் அருகே சுதனாகிபுரம் என்ற பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த நபரை ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மளிகை கடை நடத்தி வருகிறார் இவர் திண்டுக்கல் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தார் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுதனாகிபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென காற்றில் பறந்து வந்த இரும்பு தகரம் தாக்கியதில் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்தது இந்த விபத்தில் ராஜேஷ் படுகாயம் அடைந்தார் அதே வேளையில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் சாலையில் காயம் அடைந்து கிடந்த ராஜேஷை உடனடியாக மீட்டு முதலுதவி செய்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார் இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களை தொடர் கொண்ட ஐ.பி.செந்தில்குமார் உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.
Next Story