மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ் கைது எஸ்.பி நடவடிக்கை

X
திண்டுக்கல், சீலப்பாடி மகாலட்சுமி நகரை சேர்ந்த பார்த்திபன்(35) இவர் பழனி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். இவர் தனது மனைவி வினோதினியுடன் ஒட்டன்சத்திரம் போலீஸ் குடியிருப்பில் குடியிருந்து வந்தார். காவலர் பார்த்திபன் வாட்ஸ் அப்பில் பெண்களிடம் பேசுவது, தவறான புகைப்படங்கள் வைத்திருப்பது குறித்து கணவனின் குடும்பத்தாருக்கு கூறியதை தொடர்ந்து வினோதினி வீட்டை விட்டு விரட்டப்பட்டார். இதுகுறித்து வினோதினி மாவட்ட எஸ்.பி.-யிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்ததை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர். பார்த்திபன் அடிதடி வழக்கில் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்று கன்னிவாடி காவல் நிலையத்தில் கையெழுத்துட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

