சொத்து தகராறில் வக்கீல் வெட்டிக் கொலை

X
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சிறுகிணறு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் தாராபுரத்தில் தேன்மலர் மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளி நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மகனான வழக்கறிஞர் முருகானந்தம் என்பவருக்கும் இந்த இடத்தில் பாகம் உள்ளது என வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அனுமதி இன்றி கட்டப்பட்ட 4வது மாடியை நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான பகை உருவானது. இந்நிலையில் பள்ளி பின்பகுதியில் இருக்கும் முருகானந்தத்தின் இடத்தில் நின்றிருந்த போது 3க்கும் மேற்பட்டோர் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து டி.எஸ்.பி சுரேஷ் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

