நவாப் பழங்களை சேகரித்து பொதுமக்களுக்கு கொடுத்த திண்டுக்கல் தீயணைப்பு துறையினர்

நவாப் பழங்களை சேகரித்து பொதுமக்களுக்கு கொடுத்த திண்டுக்கல் தீயணைப்பு துறையினர்
X
கீழே விழுந்து வீணாக போகும் நவாப் பழங்களை சேகரித்து பொதுமக்களுக்கு கொடுத்த திண்டுக்கல் தீயணைப்பு துறையினர்
திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் அருகே பெரிய நவாப்பழ மரம் உள்ளது. தற்பொழுது சீசன் காலம் என்பதால் ஏராளமான பழங்கள் பழுத்து உள்ளது. காற்று அடிக்கும் போதெல்லாம் பழங்கள் கீழே விழுந்து யாரும் சாப்பிட முடியாமல் வீணாக போய்க் கொண்டிருந்தது. இதனை எடுத்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் வீரர்கள் அனைவரும் ஒரு தார்ப்பாயை எடுத்து சென்று பிடித்துக்கொண்டனர். மேலே ஒரு வீரர் ஏறி பழங்களை உழுப்பி விட்டார். ஏராளமான பழங்கள் வீணாகாமல் கிடைத்தது. இதனை அடுத்து அப்பகுதியில் செல்லும் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் பழங்களை வழங்கினர். இதனை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு துறையினரை பாராட்டி சென்றனர்.
Next Story