பரமத்திவேலூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு தாழ்வான பகுதியில் இருந்து வெளியேற அறிவிப்பு.

X
Paramathi Velur King 24x7 |28 July 2025 6:38 PM ISTபரமத்திவேலூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தாழ்வான பகுதியில் இருந்து வெளியேற அறிவிப்பு.
பரமத்திவேலூர், ஜூலை 28: பரமத்தி வேலூர் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பரமத்தி வேலூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வினோத் குமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், ஜேடர்பாளையம், வடகரை யாத்தூர், ஆனங்கூர், அ.குன்னத்தூர், பிலிக்கல்பாளையம், சேளூர், கொந்தளம், வெங்கரை, பொத்தனூர், பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, கொமராபாளையம், மோக னூர்உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் காவேரிகரையோரம் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் அனை வரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவிக் கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ, துணிதுவைக்கவோ, கால்நடைகளை மேய்ச் சலுக்கு விடவோ, கால்நடைகளைகுளிப்பாட்டவோ, மீன் பிடிக்கவோ, அக்கறைக்கு ஆற்றை கடந்து செல்லவோ கூடாது. அதேபோல் வருவாய் அலுவலர்கள், அந்தந்த பகு திகளை சேர்ந்த விஏஒ, கிராம உதவியாளர்கள் காவிரி ஆற் றில் வெள்ளம் வரும் அபாயகரமான சூழ்நிலை உள்ளதால் அந்தந்த பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அரசு அவசர உதவி எண்களான 1077, 100, 101,104,108, ஆகிய எண்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வும், பொதுமக்களை சந்தித்து இது குறித்து தெரிவிக்குமா றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
