மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம்p602 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்ன அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, நாமக்கல் வட்டம், பேட்டைகாலனி தெருவில் கடந்த 09.07.2025 அன்று 3 வீடுகள் தீ பிடித்து எரிந்ததில் வீட்டில் இருந்த அடையாள ஆவணங்கள் எரிந்து சாம்பலானதையொட்டி, 3 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் மற்றும் பட்டா நகல்களையும், தாட்கோ சார்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.1,67,30,549/-திட்ட மதிப்பில் ஏசி, குளிர்சாதன பெட்டி விற்பனை (ம) சேவை, பயணியர் வாகனம், ஆழ்துளை கிணறு, செண்டரிங், கார்மெண்ட்ஸ், சுமை வாகனம், போட்டோ ஸ்டுடியோ, சாமியானா பந்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு ரூ.52,93,913/- மானியத்தொகையினையும் என மொத்தம் 21 நபர்களுக்கு ரூ.52.93 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், தாட்கோ மேலாளர் பா.ராமசாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story