முத்துக்காளிப்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்...

X
Rasipuram King 24x7 |28 July 2025 9:06 PM ISTமுத்துக்காளிப்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி விஐபி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் அம்மனுக்கு நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ சக்தி மாரியம்மன் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் பக்தர்கள் மற்றும் ஆலய திருப்பணி குழுவினரால் வழங்கப்பட்ட வளையல்கள் கொண்டு மலர்களால் அலங்காரம் செய்து மாரியம்மனுக்கு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் விஐபி நகர் ஆலய திருப்பணி குழு நிர்வாகிகள் தலைவர் ஏ. முருகேசன், செயலாளர் எம். செல்வம், பொருளாளர் எஸ். மாணிக்கம், துணைத் தலைவர் ஏ. சேகர், இணைச் செயலாளர் ஆர்.அத்தியப்பன் மற்றும் உறுப்பினர்கள் வைரமுடி, கிருஷ்ணன், சின்ராசு, முருகேசன், கணேசன், ராஜா, கிருஷ்ண தாஸ், கணேஷ் சங்கர், ரமேஷ், சுந்தரம், சுப்பிரமணியன், மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
