அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூதாட்டி மாயம்

X
Komarapalayam King 24x7 |28 July 2025 9:32 PM ISTகுமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூதாட்டி மாயமானார்.
குமாரபாளையம் பூசாரிக் காடு பகுதியில் வசிப்பவர் தனலட்சுமி, 80. இவர் உடல்நிலை சரியில்லாமல் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் நேற்று அதிகாலை 04:00 மணிமுதல் காணவில்லை. இது குறித்து இவரது மகன், நாகராஜன், 59, குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் காணாமல் போன மூதாட்டியை தேடி வருகின்றனர்.
Next Story
