ராசிபுரத்தில் ஸ்ரீ ஆண்டாள் உற்சவர் திருவீதி உலா..

ராசிபுரத்தில் ஸ்ரீ ஆண்டாள் உற்சவர் திருவீதி உலா..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் தாயாருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் தாயார் உற்சவர், பொன் வரதராஜ பெருமாள் சாமி அலங்கரித்து உற்சவர் திருவீதி உலா ராசிபுரம் முக்கிய வீதி வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆண்டாள் வழிபாட்டு குழுவினர் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story