சமூக நீதி என பெயர் மாற்றத்தை திரும்பப் பெறக்கூறி புகார் மனு

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கள்ளர் விடுதி மற்றும் கள்ளர் பள்ளியை சமூக நீதி என பெயர் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் என புகார் மனு வழங்கினார். மேலும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். செய்தியாளர்களை சந்தித்த ஆத்தூர் ஒன்றிய செயலாளர் வடிவேல் கள்ளர் சமுதாயத்தினர் கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக 1927இல் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கள்ளர் சீரமைப்பு பள்ளி மற்றும் கள்ளர் விடுதி துவங்கப்பட்டது. இதில் திண்டுக்கல் தேனி மதுரை ராமநாதபுரம் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக அளவு மக்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது தமிழக அரசு 10.7.2025 அன்று கள்ளர் பள்ளிகளையும் கள்ளர் விடுதிகளையும் சமூகநீதி என பெயர் மாற்றுவதற்காக அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. தற்போது சமூக நீதி என கள்ளர் பள்ளிகள் மற்றும் கள்ளர் பள்ளி விடுதிகளில் சமூக நீதி என பெயர் பலகை எழுதி வருகின்றனர். இதை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் மேலும் தமிழக அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது என்று கூறினார்.
Next Story

