ஓசூரில் முருகன் கோவிலில் சண்டி ஹோமம்

ஓசூரில்  முருகன் கோவிலில்  சண்டி ஹோமம்
X
ஓசூரில் முருகன் கோவிலில் சண்டி ஹோமம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் உலக நன்மை வேண்டி சண்டி ஹோமம் நேற்று நடந்தது. இதை ஒட்டி யாக சாலை அமைக்கபட்டு அதில் பூஜை பொருட்களை போட்டு யாகம் வளர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓதி சண்டி ஹோமத்தை நடத்தினர். சண்டி ஹோம நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர்.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story