சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் புதிய தேருக்கு இரும்பு சங்கிலி

X
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. வருகிற 8-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. தேர் இழுக்க பயன்படும் இரும்பு சங்கிலி கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை கோவிலுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ஸ்ரீசெந்தில் கன்ஸ்ட்ரக்சன், ஸ்ரீசெந்தில் நிதி நிறுவனம் சார்பில் ரூ.3½ லட்சத்தில் இரும்பு சங்கிலி வழங்கப்பட்டது. இந்த சங்கிலியை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் எஸ்டி.என்.சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
Next Story

