சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் விளையாட்டு விழா

X
சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 58-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் ஹோலி ஏஞ்சல் பள்ளி முதல்வர் ஷெர்லி ஜெபாஸ்டியன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுஜிதா தலைமை தாங்கினார். விழாவில் முதன்மை விருந்தினராக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், சேலம் மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம், ஓமலூர் பள்ளி முதல்வர் விமல் ஆகியோர் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு விழா மேடையில் வண்ண பலூன், புறாக்களை பறக்க விட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு 100, 200 மீட்டர் தொடர் ஓட்ட போட்டிகள், கராத்தே, ஜிம்னாஸ்டிக், ஈட்டி, குண்டு எறிதல், பேச்சுப்போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு, சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

